Sunday, August 18, 2013

இலங்கைத் தேயிலை,,,
                 ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

இலங்கைத்தேயிலை சுவையானதாமே!
ஏன் இருக்காது?
எல்லாத்தேயிலையைப்போல
தண்ணீரில் தழைத்ததா என்ன?
சுதந்திர வேட்கைகொண்டுமாண்ட
தமிழனின் செந்நீரில்தழைத்தது!!

செயற்கை உரத்திலாஅது
செழித்து வளர்ந்தது?
இல்லை,இல்லை,

தமிழ்க்குழந்தைகளின்
தளிர் எலும்புகளால் அல்லவா
செழித்து வளர்ந்தது!

அடி உரம் என்ன
அயல் நாட்டில் இருந்தா வந்தது?
உரிமை கேட்டு
உயிர்விட்ட தமிழனின்
உடைந்த உடம்பல்லவா
உரமானது!

துயர்
பட்டதமிழனின்
பட்டுக்கரங்கள்
தொட்டுப்பறித்த
பச்சைத்தேயிலை
சுவைக்காமலா  இருக்கும்?
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

No comments:

Post a Comment