Saturday, August 24, 2013

                        உயிர்க்கருவி,,
                ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
மோகனக்காற்று வந்து முகங்குளிர வீசியும்
ஆணவத்திசையில் என்றும் ஆடவில்லை என்மனம்

கானகக் குருவிபோல காணவேண்டும் சுதந்திரம்
கற்கவேண்டும் உலகை ஆளும்அன்பு என்னும் மந்திரம்,

ஆயிரம் கோடிகட்கு அடிமை இல்லை என் மனம்
அன்புதன்னில் சிக்கி என்றும்அடிமை ஆவதெங்கனம்!

எண்ணமதை எழுதவேண்டி எழுந்துவந்ததொருவரி
எழுதவந்தகவிவரியோ ஏட்டளவில் பொதுவழி!

பிழையுமுண்டு பிதற்றலுண்டு பெருங்கவிஞன் நானில்லை
இராகம் மட்டும்கூடிவரும் அது இரவியின் தனிக்கலை!

இன்று மனம் ஞானிபோல எழுத எண்ணம்கொண்டது
எழுத எண்ணம்கொண்டதனால் எழுத்துவந்து விழுந்தது!

எழுதவந்த எண்ணம் எல்லாம் எனமனமேசொன்னது
படித்தவர்கள்பழிக்க இந்த ஞானிக்கென்ன வந்தது?

ஊர்கெடுத்துப் பேரெடுத்த உயர்ந்த மனம் எத்தனை?
ஊர் உயர உயிர் கொடுத்தோர் உற்ற துன்பம் எத்தனை?

பணத்தை மட்டும்போற்றி வாழும் பேய்மனங்கள் எத்தனை?
குணத்தை மட்டும் போற்றி வாழ்ந்தோர்பெற்றதுதான் எத்தனை?

அத்தனையும் எண்ணி எண்ணிப்புத்தன்செய்தான் சிந்தனை
அதனால் தான்வந்ததிந்த போதிமரப் போதனை!

புத்தனவன் பெயரைச்சொல்லி வாழும் எத்தர் எத்தனை?
சித்தம்குளிரப்பேசிவிட்டு செய்யும் குற்றம் எத்தனை?

சிலுவைதன்னில் அறைந்து போன ஏசு சொன்னது எத்தனை?
ஏசு சொன்ன வார்த்தைகளை எடுத்துக் கொண்டோர் எத்தனை?

காந்தி சொல்லி வைத்ததிந்த அன்பு என்னும் திரு வழி!
காந்திபோல இருந்து விட்டால் இல்லை கவலை இது விதி!

அனைத்து உயிரும் உணபதற்காம் என்று சொன்னது ஓரு வழி
அனைத்து உயிரும் தம் உயிராய் போற்றச்சொன்னதுதமிழ் மொழி!

எந்தவழியில்வாழ்ந்தாலும் போயொழிவது புதை குழி
என்பதனை அறிந்து கொண்டால் அன்பு தானேநல்வழி!

அன்பு கொண்ட உள்ளமென்றும் அழிவதில்லை உலகிலே
அன்பு இல்லாமனிதர்க்கிது புரியவில்லை மனதிலே!

உண்மைஅன்பு கொண்டு என்றும் உயரவேண்டும் வாழ்விலே
ஊருலகம் நூறுசொல்லும் உதற வேண்டும் தெருவிலே!

தன்மை கொண்டு வாழ்ந்து வந்தால் தர்மம் காக்கும் வாழ்வினை
உண்மை இது பொய்யில்லை  உணர வேண்டும் மனதிலே!

இன்று வாழ்வு நாளை சாவு என்பதுதான்தத்துவம்
உண்மை இதை உணர்ந்துகொண்டால் உண்டு வாழ்வில் மகத்துவம்

துன்பம் உண்டு துயரம் உண்டு உலகில் அது சமத்துவம்
அத்துனையும் தாங்கிக்கொள்ளவேண்டும் மனப்பக்குவம்!

இன்று வரும் நாளைபோகும் செல்வம் ஒரு தரித்திரம்
கொஞ்சமஅதைப் புரிந்து கொணடால் யார்க்கும் உண்டு சரித்திரம்!

உழைக்க உழைக்க உயர்ந்து வரும் உழைத்த வாழ்வு நிச்சயம்
களைப்பு தீர்ந்து கவலை தீர்ந்து கனியும் வாழ்வு சத்தியம்!

அன்பு கொண்ட நெஞ்சம் தானே ஆண்டவன்தன் ஆலயம்
அறிந்து கொண்டஅன்பு கொண்டால் மகிழ்ச்சி எந்தவேளையும்

அனபு கொண்ட உள்ளம் தனை அறிந்துகொள்ளல்கடினமே
உணர்ந்து கொண்டபின்னும் கூட உறவு கொள்ளல் கடினமே!

வாயளவில் பேசப் பேசவருவதெல்லாம் இன்பம்தான்
செய்முறையில் எண்ணிப்பார்த்தால் இன்பம் கூடத் துன்பம்தான்!

ஏற்றம் உண்டு தாழ்வும் உண்டு மனித வாழ்வில் உலகிலே
கற்றுவந்த கல்வி கொண்டு கணிக்க வேண்டும் மனதிலே!

பற்று கொண்ட நெஞ்சம் கூட வேடம் போடும் உலகிலே
முற்றும் துறந்த முனிவன் கூட மாற்றம் கொள்வான் மனதிலே!

தாய்மை பாசம் உறவு எல்லாம் உதட்டளவில் உண்மையே
வாழ்ந்துகெட்டு வந்து நின்றால் புரிந்துவிடும் உண்மையே!

உயர்ந்த வாழ்வு கொண்டபோதும் உண்மை அன்பு கொள்ளுங்கள்
உண்மை அன்பை நெஞ்சில் வைத்து உலகை என்றும் வெல்லுங்கள்!

உயிர்க்குருவி பறந்து விட்டால் உடலம் வெறும் பொம்மையே!
கருணை கொண்டு வாழ்ந்திருந்தால் கூட வரும் பெருமையே!!
மண்ணில் பிறந்த உயிர் அனைத்தும் மண்ணில் மறைந்தாகனும்
மண்ணில் மறைந்து போகும்முன்னே மாம்புகழைச்சூடனும்!!

அதற்குவழி அனபு அன்றிவேரு ஏதும் இல்லையே
அந்த வழிதான் இந்த அற்ப வாழ்வின் எல்லையே!!!!

Sunday, August 18, 2013

    மீண்டும்   விடுதலை!!
                               ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

விடுதலை விடுதலை  விடுதலை
வேண்டும் வேண்டும்  வேண்டுமிங்கு
மீண்டும்  ஒரு  விடுதலை!!

மதுவிடமும் புகையிடமும்
மாட்டிக்கொண்டு விழிக்குமந்த
குடியருக்கும்  புகைஞருக்கும்
வேண்டும் ஒரு விடுதலை!!
                                        விடுதலை,,விடுதலை,,
பழமையிலும்  மடமையிலும்
வாழ்ந்து கெட்டுத்தேயுமந்த
ஆண்களுக்கும்பெண்களுக்கும்
வேண்டும் ஒரு விடுதலை!!
                                         விடுதலை,,விடுதலை,,
நோயிடமும் சோர்விடமும்
சொந்தம்கொண்டு துடிக்குமந்த
உடலினுக்கும் மனதினுக்கும்
வேண்டும் ஒரு விடுதலை!!
                                         விடுதலை,,விடுதலை,,
வறுமையிலும் கொடுமையிலும்
வாழ்ந்து கெட்டுச்சாகுமந்த
ஏழையர்க்கும் கோழையர்க்கும்
வேண்டும் ஒரு விடுதலை!!
                                        விடுதலை,, விடுதலை,,
கைம்மைக்கும் பொய்ம்மைக்கும்
வாய்மை பேசித்தீயுமந்த
மனத்திற்கும் குனத்திற்கும்
வேண்டும் ஒரு விடுதலை!!
                                         விடுதலை,, விடுதலை,,
சாதியெனும் பேய்ப்பிடியின்
சாக்கடையில்  மிதக்குமந்த
மானங்கெட்ட மனிதனுக்கு
வேண்டும் ஒரு விடுதலை!!
                                          வடுதலை,, விடுலை,, விடுதலை
இதயத்தில் நீ!
                    ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

கடல்கரை மணலில்
கால்வலிக்க ஓடி ஓடி
எடையைக் குறைக்க- நான்
எடுத்துக் கொண்ட முயற்சியில்
ஓடாய் இளைத்து விட்டேன்!
எடை மட்டும் குறையவில்லை!!!
ஏன் என்று எண்ணிப்பார்த்தேன்,,,ஓ!
என் இதயம் உன் கனம் கனக்கிறது!
அடியே,,,,
என் இதயம் மட்டும்,
உன் கனம் கனக்கிறது!!!!


                  வாலிபக் கவிதை!!!
                                 ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

வாலிபக் கவிஞர்களே
உங்கள்
வசந்தகாலக் கவிதைகளை
வீசி
எறிந்து விடுங்கள் !

             உங்களுக்கு வரப்போகும் மனைவி
                           
                             நீங்கள்
                             வைரமுத்தாய்
                              வார்த்தை ஜாலம் ஆடியதை
                             பொன்மணி போல்
                             பொறுக்கி வைக்க மாட்டாள்,,,,,,

வாலிபக்கவிஞர்களே!
உங்கள்
ஒவ்வொருகவிதையும்
ஓட்டுச்சீட்டுகள்!

                                ஆம்!!!!
                                                  சந்தேக சாம்ராஜியத்தின்
                                                  சர்வாதிகாரினியாக
                                                  உங்கள் மனைவியை
                                                  உருவாக்கும்
                                                  ஓட்டுச்சீட்டுகள்!!!
ஆகவே!!
வாலிபக்கவிஞர்களே
வந்தவரை லாபமென்று
நீங்ள்
வரைந்துவைத்த
வாலிபக்கவிதைகளைப்
பேரீச்சம்பழமாக்கிவிடுங்கள்
இல்லையேல்
பேரச்சம் சூழ்ந்துவிடும்!!!
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

யாரிடம் கேட்பேன்?
                       ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

அன்புதனை எண்ணியெண்ணி
நெஞ்சம் என்ன கண்டது?
பாசம்தனில் சிக்கிக்கொண்டு
அன்றும் இன்றும் வெந்தது!

பந்த பாசம் அத்தனையும்
வேடம் என்று கண்டது!
வேடம் என்று கண்டபின்னே
மேலும் மனம் நொந்தது!

அன்புகொண்ட வாழ்வுதனை
எண்ணிமனம் வாழ்ந்தது
நித்தமொரு தொல்லை வந்து
நேசக்கரம் தந்தது!

புத்தன் மனம் ஓடிச்சென்று
போதிமரம் கண்டது
பித்தனிவன் எங்கு சென்று
யாரை வரம் கேட்பது?
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

இலங்கைத் தேயிலை,,,
                 ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

இலங்கைத்தேயிலை சுவையானதாமே!
ஏன் இருக்காது?
எல்லாத்தேயிலையைப்போல
தண்ணீரில் தழைத்ததா என்ன?
சுதந்திர வேட்கைகொண்டுமாண்ட
தமிழனின் செந்நீரில்தழைத்தது!!

செயற்கை உரத்திலாஅது
செழித்து வளர்ந்தது?
இல்லை,இல்லை,

தமிழ்க்குழந்தைகளின்
தளிர் எலும்புகளால் அல்லவா
செழித்து வளர்ந்தது!

அடி உரம் என்ன
அயல் நாட்டில் இருந்தா வந்தது?
உரிமை கேட்டு
உயிர்விட்ட தமிழனின்
உடைந்த உடம்பல்லவா
உரமானது!

துயர்
பட்டதமிழனின்
பட்டுக்கரங்கள்
தொட்டுப்பறித்த
பச்சைத்தேயிலை
சுவைக்காமலா  இருக்கும்?
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

 பேனா,,,
   ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ஓ பேனாக்களே!
நீங்கள் காகித த்தைத்
தொடும் போதெல்லாம்
வடிக்கின்றீர்களே,,
அது,,
காகித எதிரியைக்
கையால் தொடுகிறோமே
என்ற எண்ணத்தில்
நீ விடும் கண்ணீரா?
அல்லது,
தாளின் மீது
தலை கீழ் நாட்டியம்
ஆடிக்களைத்த தால்
வரும் வியர் வையா?

இல்லை
கவிஞன் ஒருவன்
கற்பனைக் குதிரை
ஏறும்போது
தலைகீழாய்நின்று
அழவேண்டி இருக்கிறது
 என்கிறாயா?

உள்ளத்தில் வரும்
வார்த்தைகள் எல் லாம்
உதட்டில் வர
மறுப்பதால் தானோ
உன்னை ஒருவன்
படைத்தான்!!

சட்டைக்காதலனை
விட்டுப்பிரிய
மனமில்லாத தால்தானோ
சட்டைக் காதலனை
மெட்டிப்பிடித்திருக்கிறாய்

என்ன இருந்தாலும்
நீயும் மனிதனைப்போலச்
சலனப்பேர்வழிதான்
எப்படி என்கிறாயா?

நீதான் சிலசமயம்
சட்டைக்காதலன்மீது
சிந்திவிடுகிறாயே!!!!
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

சாலைகள்!!

  சாலைகள்
                          ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

பரந்த பூமியின்
விரிந்த ரேகைக் கோடுகளா?
அல்லது இரத்த நாளங்களா?

இல்லை,இல்லை,
ஊர் முழுதும் ஓடிச் செல்லும்
ஒற்றுமைவாதிகள்!

பெருந்தலைவர்களின்
பெயரைச் சூடிக்கொள்ள வந்த
பொதுவுடமைகள்!

வளர்ந்து கொண்டேவரும்
வாகனவாய்க்கால்கள்!

பொதுப்பணித்துறையினரின்
பொன்முட்டையிடும் வாத்து!

அன்றோ ஊருக்குச்செல்லும்
பண்டையகாலப் பாதச்சுவடுகள்
இன்றோ உயிரைப் பறிக்கும்
எமதர்மனின் ஏஜண்டுகள்!

பிரதமரின் வருகைக்காக மட்டுமே
புதுச்சட்டை போட்டுக்கொள்ளும்
மேனாமினுக்கிகள்!!

ஓய்வே இல்லாத
ஓவர்டைம் ஊழியர்கள்!

பழுதடைந்தால் மட்டமே
குட்டி போடும் புதுப்பிறவிகள்!

பல இடங்களில்
பாலக்கால்களால்
தண்ணீரையும் இரயிலையும்
தாண்டிப்போனாலும்
சில இடங்களில்
பணிந்தே போகும்
பள்ளப்பாம்புகள்!!
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,