Saturday, March 28, 2020

கொரோனா பாடம் !

ஆடுகிற ஆட்டமெல்லாம்
ஆடி வந்த மானிடா!
ஓடுகிற ஓட்டமெல்லாம்
ஓடி  முடித்த தேனடா?

காசு பணம் வேண்டுமெனக்
கருணை மனம் சொல்லுதா ?
உயிரு மட்டும் போதுமென்ற
ஞானம் வந்து பிறந்ததா?

குடியும் கூத்தும் போனதா
ஆட்டம் பாட்டம் ஓய்ந்ததா?
அடிதடிகள் மறந்து நெஞ்சில்
ஆணவத் திமிர்  ஒழிந்ததா ?

பந்தபாசம் வேண்டுமென்று
பயத்தில் மனம் வேண்டுதா ?
சொந்தபந்தம் எல்லோரையும்
சொந்தங்கொள்ளத் துடிக்குதா ?

ஆடுகிற ஆட்டம் கண்டு
இயற்கை தந்த அடியிது !
மூடிவைத்த வீட்டுக்குள்ளே
வைத்த சிறைப் படிப்பிது !

ஊரை ஏய்த்து வந்த பணம்
உதவிக்கரம் நீட்டுமா ?
வாங்கிவைத்த லஞ்சப்பணம்
வந்து உன்னைக் காக்குமா?

கோடிகோடியாக நீயும்
கொள்ளை அடித்த பணமெல்லாம்
வீடுதேடி வந்து உன்னை
கொள்ளிவைக்கும் பணமடா!

குடும்பத்தோடு வாழ வைத்த
சூச்சுமந்தான் புரியுதா?
சுற்றுச்சூழல் மூடிவைத்துச்
சொல்லும் சேதி தெரியுதா…

No comments:

Post a Comment