Thursday, August 25, 2011

எனக்கு நீ !

நேர் பார்க்கும் என் விழிகள்
உனைப்பார்க்கும் போது மட்டும்
நிலம் பார்க்கிறது !

எதிர் பார்க்கும் என் நெஞ்சம்
உன்குரல் கேட்கும் போது மட்டும்
சிளிர்க்கின்றது!

தூங்கிவிட ஏங்கும் என் விழிகள்
உனைப்பார்காத போது மட்டும்
தூங்க மறுக்கிறது !

இப்போது சொல் எனக்கு
நீ யார் என்று?

No comments:

Post a Comment