ஒ மனிதனே !
மண்ணில் பிறந்த
உயிர்கள் அனைத்தும்
மண்ணில்
மறைந்தாக வேண்டும்
என்ற தத்து வத்தை
மாற்றியமைத்துக்கொள் !
ஏனெனில்
ஆடு மாடுகளின்
சுடுகாடு
உன் வயிறுதானே!!!
Tuesday, August 30, 2011
Thursday, August 25, 2011
நிர்வாணம் !
புத்தபிரானே !
உன்
போதனைகளை நாங்கள் புறக்கணித்தாலும் ,
உன்
சாதனைகளைமறக்கவில்லை
ஆம்
உன் நிர்வாணத்தை
நாங்கள்
தேசிய உடை ஆக்கப்போகும் நாள்
வெகு தொலைவில் இல்லை
ஏனெனில்
நாங்கள்
நாகரிகத்தை நோக்கி
பீடுநடை போடுகிறோம் !!!
உன்
போதனைகளை நாங்கள் புறக்கணித்தாலும் ,
உன்
சாதனைகளைமறக்கவில்லை
ஆம்
உன் நிர்வாணத்தை
நாங்கள்
தேசிய உடை ஆக்கப்போகும் நாள்
வெகு தொலைவில் இல்லை
ஏனெனில்
நாங்கள்
நாகரிகத்தை நோக்கி
பீடுநடை போடுகிறோம் !!!
ருத்ர தாண்டவம் !
சமையல் கேஸ் தீர்ந்து
நாட்கள் நான்காயிற்று ,
அடுப்பில் வைத்த
புது விறகு எரிய மறுத்து
எரிச்சலூட்டிஇருக்கிறது !
ஊதி ஊதி
ஓய்ந்து போனவள்
சாய்ந்து படுத்திருந்தாள் !
பசிக்கிறது சீக்கிரம்
என்றே நானும்
பக்கத்தில் போனேன்
ஊதுகுழலை எடுத்துக்கொண்டு
ஆடினாளே ஒரு ஆட்டம்
அப்பப்பா !!!
நாட்கள் நான்காயிற்று ,
அடுப்பில் வைத்த
புது விறகு எரிய மறுத்து
எரிச்சலூட்டிஇருக்கிறது !
ஊதி ஊதி
ஓய்ந்து போனவள்
சாய்ந்து படுத்திருந்தாள் !
பசிக்கிறது சீக்கிரம்
என்றே நானும்
பக்கத்தில் போனேன்
ஊதுகுழலை எடுத்துக்கொண்டு
ஆடினாளே ஒரு ஆட்டம்
அப்பப்பா !!!
எனக்கு நீ !
நேர் பார்க்கும் என் விழிகள்
உனைப்பார்க்கும் போது மட்டும்
நிலம் பார்க்கிறது !
எதிர் பார்க்கும் என் நெஞ்சம்
உன்குரல் கேட்கும் போது மட்டும்
சிளிர்க்கின்றது!
தூங்கிவிட ஏங்கும் என் விழிகள்
உனைப்பார்காத போது மட்டும்
தூங்க மறுக்கிறது !
இப்போது சொல் எனக்கு
நீ யார் என்று?
உனைப்பார்க்கும் போது மட்டும்
நிலம் பார்க்கிறது !
எதிர் பார்க்கும் என் நெஞ்சம்
உன்குரல் கேட்கும் போது மட்டும்
சிளிர்க்கின்றது!
தூங்கிவிட ஏங்கும் என் விழிகள்
உனைப்பார்காத போது மட்டும்
தூங்க மறுக்கிறது !
இப்போது சொல் எனக்கு
நீ யார் என்று?
Thursday, August 18, 2011
விடுகதை விடுகவிதைஃ
பட்டுபோன்ற மேனிகொண்டே -என்
படுக்கையறையில் காத்துக்கிடப்பாள் -என்
கட்டுக்குலையா மேனிதன்னில் -அவள்
கட்டிப் புரண்டே முத்தமிடுவாள் -அவள்
இட்ட முத்தம் மறையாதிருக்க -எனை
இருகக்கடித்தே இன்புற்றிருப்பாள் -தினம்
கொட்டக்கொட்ட விழித்திருந்தே -சுவை
சொட்டச் சொட்ட அனுபவித்திருப்பாள் -நான்
திட்டத்திட்ட மறைந்துவந்தே -என்
திட்டியவாயில் சுவை பெற்றிருப்பாள் -ஐயோ
பட்டது போதும் என்றே எண்ணி -வெளிக்
கோட்டத்தில் வந்து படுத்தபோதும் -தோளில்
ஒட்டியபடியே என்னுடன் வருவாள் .
(இது முத்தமிட்ட மூட்டைப்பூச்சி )
படுக்கையறையில் காத்துக்கிடப்பாள் -என்
கட்டுக்குலையா மேனிதன்னில் -அவள்
கட்டிப் புரண்டே முத்தமிடுவாள் -அவள்
இட்ட முத்தம் மறையாதிருக்க -எனை
இருகக்கடித்தே இன்புற்றிருப்பாள் -தினம்
கொட்டக்கொட்ட விழித்திருந்தே -சுவை
சொட்டச் சொட்ட அனுபவித்திருப்பாள் -நான்
திட்டத்திட்ட மறைந்துவந்தே -என்
திட்டியவாயில் சுவை பெற்றிருப்பாள் -ஐயோ
பட்டது போதும் என்றே எண்ணி -வெளிக்
கோட்டத்தில் வந்து படுத்தபோதும் -தோளில்
ஒட்டியபடியே என்னுடன் வருவாள் .
(இது முத்தமிட்ட மூட்டைப்பூச்சி )
Subscribe to:
Comments (Atom)