Friday, January 14, 2011

பொங்கல் வாழ்த்து

உண்ணும் உணவை
உலகினுக்கீந்த
உழவனுக்கு -இது விழா
அவனிதனுக்கே
அனைத்தையும் ஈந்த
ஆதவனுக்கு -இது விழா

பாலும் நெய்யும்
பாருக்கீந்த
பசுவினுக்கு -இது விழா
வாழும் வழிதனை
வரிகளில் வகுத்த
வள்ளுவனுக்கும்- இது விழா

கொண்டாடு தமிழா நீ
புத்தாண்டுப் பெருமையுடன்
தைப்பொங்கல் - தமிழ் விழா .


No comments:

Post a Comment