ஆண்- கோடை மழை கொட்டுதடி குளிக்க போலாம் வாரியா ?
பெண்- ஆடை நனைய ஆட்டம் போட்டால் சேட்டை செய்ய மாட்டியா ?
ஆண்- வாடைக் காத்து வீசுதடி வந்தனைக்க மாட்டியா ?
பெண்- வந்தனைக்க வந்துவிட்டால் வளைச்சுப் போடமாட்டிய ?
ஆண்- வலையைப் போட்டு மீன் புடிச்சா கொழம்பு வைக்க மாட்டியா ?
பெண்- கொழம்பு வச்சு நான் கொடுத்தால் குடம் குடமா குடிப்பியா ?
ஆண்- குழம்பை நானும் குடிச்சுப் பிட்டு குறும்பு செய்தால் தடுப்பயா ?
பெண்- குறும்பு செய்ய நானும் விட்டால் வறம்பு மீற மாட்டியா ?
ஆண்- வரம்புயர நீருயரும் நாத்து வைப்போம் வாரியா ?
பெண்- வச்ச நாத்து விழைஞ்சு நின்னா சே ர் த் த று ப் போம் வாரியா ?

No comments:
Post a Comment