Monday, September 3, 2012

                                               குத்துப் பாட்டு !

ஜீன்ஸ்பேண்ட்டு சட்டைதான்
          பிகரு  நாட்டுக்கட்டைதான் !
உடும்புபிடியா இறுக்கி புடிச்சா
          இடுப்பு போடும் நெட்டைதான் !
வெத்திலை பாக்கு போட்டியா ?
         உதடு முந்திரிக் கொட்டையா ?
எத்தனைவாட்டி கேட்டுப்புட்டேன்
         முத்தம் தரமாட்டியா ?
வெளுத்துப்போட்ட சட்டையா
         வெள்ளைக் குதிரை நெட்டையா
எத்தனைகாலம்  காத்துப்புட்டேன்
          என்னை சேக்கமாட்டியா ?
   ஊர் முழுதும் தேடினேன்
           உன்னைக் கண்டு தேறினேன்
 சோறுதண்ணி ஏதுமின்றி
          உன்னை நினைச்சே வாடினேன் !
குத்துப்பாட்டு கேட்டியே
       குதறிப்போட்டேன் பாத்தியா ?
பத்துப் பாட்டு பாடிப்போட்டேன்
       பத்தவைக்க மாட்டியா ?
வாளைமீனு  கேட்டியே
       வாங்கிப்போட்டேன் பாத்தியா ?
வணக்கிப்போட்டு கொழம்பு வச்சு
       வரிஞ்சு கட்டமாட்டியா ?

Sunday, September 2, 2012

kotai malai

        ஆண்-                     கோடை மழை  கொட்டுதடி குளிக்க போலாம்  வாரியா ?      

 பெண்-                 ஆடை நனைய ஆட்டம் போட்டால்  சேட்டை செய்ய மாட்டியா ?

 ஆண்-                 வாடைக் காத்து  வீசுதடி  வந்தனைக்க மாட்டியா ?

 பெண்-                     வந்தனைக்க வந்துவிட்டால்  வளைச்சுப் போடமாட்டிய ?

ஆண்-                  வலையைப் போட்டு மீன் புடிச்சா கொழம்பு வைக்க மாட்டியா ?

பெண்-                    கொழம்பு வச்சு நான் கொடுத்தால் குடம் குடமா குடிப்பியா ?

 ஆண்-                  குழம்பை நானும் குடிச்சுப் பிட்டு  குறும்பு செய்தால் தடுப்பயா ?

 பெண்-                     குறும்பு செய்ய நானும் விட்டால்  வறம்பு மீற மாட்டியா ?

 ஆண்-                             வரம்புயர நீருயரும் நாத்து வைப்போம் வாரியா ?

பெண்-                       வச்ச நாத்து விழைஞ்சு நின்னா சே ர் த் த று ப் போம் வாரியா ?

Tuesday, May 29, 2012