Sunday, September 6, 2015

இனிய பிறந்தநாள் வாழ்த்து!!!

வாழிய வாழிய பல்லாண்டு
வளம்பெறவேண்டும் அன்போடு
இன்பங்கள் வந்துடன்தங்கிடவும்
துன்பங்கள் தூர விலகிடவும்,

எண்ணிய எண்ணங்கள் ஈடேறி
என்றும் வாழ்வில் மகிழ்ந்திடவும்
வரும்நாள் எல்லாம் வளமாக
மனநலம் என்றும் சிறப்பாக!

பொன்தமிழாலே கவிபாடி
பொதுநல வாழ்வில் புகழ்சூடி
கண்ணிமை காக்கும் கருனையுடன்
வாழ்ந்திட நானும் வாழ்த்துகிறேன்!!
 இனிய பிறந்த நாள் வாழ் த்துக்கள்!!!